விவசாயிகளுக்குத் தடையின்றி உர விநியோகத்தை உறுதி செய்ய ஜனாதிபதி ஆலோசனை
விவசாயிகளுக்குத் தடையின்றி உர விநியோகம் ஜனாதிபதி ஆலோசனை
மத்திய கிழக்கில் நிலவும் யுத்தச் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், விவசாயிகளுக்குத் தடையின்றி உரங்கள் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்தக் கலந்துரையாடலில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், விவசாயிகளுக்குத் தடையின்றி உர விநியோகத்தை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், தற்போதுள்ள உரக் கையிருப்புகளை விநியோகிக்கும் பொறிமுறையை மேலும் முறைப்படுத்துவது குறித்தும், உர இறக்குமதியில் காணப்படும் தடைகளைக் கருத்திற்கொண்டு அதற்காக எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி சிறப்புக் கவனம் செலுத்தினார்.
விவசாய உற்பத்தியைப் பாதுகாப்பதும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதுமே இந்த நெருக்கடியான சூழலில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும், அதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளைப் பணித்தார்.
Editor