ஊழியர் நம்பிக்கை நிதி டிஜிட்டல் மயம்
ஊழியர் நம்பிக்கை நிதி
பதினைந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும் இனிமேல் ஊழியர் அறக்கட்டளை நிதி பங்களிப்புகளைச் செலுத்து வதற்கும் மாதாந்திர அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கும் கட்டாயமாக மின்னணு (இணையவழி) முறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஊழியர் அறக்கட்டளை நிதி சபை அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை 2026 ஜூலை மாதத்திற்கான பங்களிப்பு செலுத்துதலிலிருந்து அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 2026 ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் இணையவழி மூலம் கட்டணங்களைச் செலுத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் கீழ், பணம், காசோலை அல்லது தபால் பணஒப்படை மூலம் ஊழியர் அறக்கட்டளை நிதி பங்களிப்பு களை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படவுள்ளதாகவும், இதுவரை பயன்படுத்தப்பட்ட அச்சு அறிக்கைகளும் இனி ஏற்கப்படமாட்டாவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு இடையூறு இல்லாமல் இந்த சேவையை வழங்கும் நோக்கில், நாட்டின் முன்னணி 9 வர்த்தக வங்கிகளுடன் இணைந்து “ஊழியர் அறக்கட்டளை நிதி மின்னணு வங்கி” சேவை ஏற்கனவே அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, செய்லன் வங்கி, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, டிஎப்சிசி வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி ஆகிய வங்கிகளின் இணைய வங்கி முறைமைகள் மூலம் நிறுவனங்கள் தங்களின் ஊழியர் அறக்கட்டளை நிதி கட்டணங் களை நேரடியாகச் செலுத்த முடியும்.
ஊழியர் அறக்கட்டளை நிதி சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி சோமசிறி ஏக்கநாயக்க, அனைத்து நிறுவனங்களும் காலக் கெடுவுக்கு முன்னர் தங்களின் பங்களிப்புகளை துல்லியமாகவும் எளிதாகவும் செலுத்தி தேவை யற்ற கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்குமாறு விசேடமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், பங்களிப்புகள் தாமதமின்றி கணக்குகளில் வரவு வைக்கப்படுவதையும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Editor