சீன தயாரிப்பு அதிநவீன புல்லெட் ரயில் – விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு

சீன தயாரிப்பு அதிநவீன புல்லெட் ரயில்

சீன தயாரிப்பு அதிநவீன புல்லெட் ரயில் – விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு

சீனாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன புல்லெட் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக நடைபெற்று வரும் சோதனை ஓட்டங்களில், புல்லெட் ரயில் மணிக்கு சுமார் 450 கிலோமீட்டர் வேகத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

2024ஆம் ஆண்டில் இந்த புல்லெட் ரயில் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதுவரை சுமார் மூன்று இலட்சம் கிலோமீட்டர் தூரம் வரை சோதனை ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன புல்லெட் ரயிலில் உயர்திறன் கொண்ட பிரேக்கிங் அமைப்பு, குறைந்த ஆற்றல் நுகர்வு, மிகக் குறைந்த அதிர்வு மற்றும் ஒலி, மேம்பட்ட காந்த அமைப்புகள் மற்றும் காற்றியல் வடிவமைப்புடன் கூடிய எடை குறைந்த கட்டமைப்பு ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த அதிநவீன புல்லெட் ரயில் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.