நிலக்கரி விவகாரம்: வெளிப்படைத்தன்மை காட்ட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு - நிர்மால் ரஞ்சித் தேவசிறி
நிலக்கரி விவகாரம்: வெளிப்படைத்தன்மை
சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும், தாம் சரியென நிரூபிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு என மூத்த கல்வியாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பணம் தொடர்பான விவகாரங்களில் சந்தேகத்தின் நன்மை குற்றம் சுமத்தும் தரப்பினருக்கே வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலக்கரி பிரச்சினையை முன்னர் நடந்த பத்திர மோசடியுடன் ஒப்பிட்ட பேராசிரியர், தரமற்ற நிலக்கரி இறக்குமதி மூலம் சிலர் முறைகேடான இலாபம் பெற்றுள்ளார்களா என்பது தீவிரமான கேள்வி என்றும், இதனால் ஏற்பட்ட இழப்பை பொதுமக்கள் மீது சுமத்துவது நியாயமற்றது என்றும் விமர்சித்துள்ளார்.
நீதி நிலைநாட்டப்படுவதாக மக்கள் காண்பதும் அவசியம் என வலியுறுத்திய அவர், இந்தப் பிரச்சினை அரசின் திறமையின்மையா அல்லது வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட மோசடியா என்பதை தெளிவுபடுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாக கூறியுள்ளார். இறுதித் தீர்ப்பை வழங்குவது மக்கள் எனவும், அதற்கான நம்பகமான தரவுகளை வழங்குவது அதிகாரிகளின் கடமை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Editor