2010-2025 கொழும்பு மாநகர சபை முறைகேடுகள்: பொதுமக்கள் புகார்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

Colombo Municipal Council irregularities 2010-2025

2010-2025 கொழும்பு மாநகர சபை முறைகேடுகள்: பொதுமக்கள் புகார்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

கொழும்பு மாநகர சபையில் 2010 முதல் 2025 வரை இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி, நம்பிக்கையீனம், அரச சொத்துக்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோத நியமனங்கள், கொள்முதல் நடைமுறை மீறல்கள் மற்றும் சொத்துக்களை குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, இது தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது

முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் தகவல்களைப் பெறுவதற்கான கால அவகாசத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் வரை நீட்டித்துள்ளது.

அத்தகைய புகார்கள் அல்லது தகவல்களை வழங்கும் நபரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கம் என்பன கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். (தமது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்கள், அது குறித்து ஆணைக்குழுவிடம் கோர முடியும்).

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்:முகவரி: இலக்கம் 152, காலி வீதி, கொழும்பு 03. தொலைபேசி இலக்கம்: 0112 301 735 (வாய்மொழி வாக்குமூலங்களை வழங்க விரும்புவோர், இந்த இலக்கத்திற்கு அழைத்து திகதியை முன்பதிவு செய்து கொள்ளவும்