இந்தியா–இலங்கை “இரட்டையர்கள்” இணைப்பு சாலை அவசியம் –

இந்தியா–இலங்கை “இரட்டையர்கள்”

இந்தியா–இலங்கை “இரட்டையர்கள்” இணைப்பு சாலை அவசியம் –

இந்தியா–இலங்கை இடையே நேரடி சாலை இணைப்பு அமைப்பது அவசியம் என  கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய  இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவையும் இலங்கையையும் நாகரிக இரட்டையர்கள்  என அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளும் வரலாற்று மற்றும் கலாசார ரீதியாக மிகவும் நெருக்கமானவை என்பதையே இதன் மூலம் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளின் புவியியல் அமைப்பை எடுத்துரைத்த அவர், இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையே வெறும் 30 கிலோமீட்டர் தூரமே இருப்பதாக தெரிவித்தார்.

இவ்வளவு குறுகிய தூரம் இருந்தும், இதுவரை நிலையான பாலம் அல்லது வழக்கமான கப்பல் சேவை அமைக்கப்படாதது ஒரு முக்கிய குறைபாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இரு நாடுகளையும் இணைக்கும் நேரடி சாலை அல்லது பாலம் அமைப்பது எதிர்கால வளர்ச்சிக்கும் இருதரப்பு உறவுகளுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும், அந்த பாலமே இரு நாடுகளையும் இணைக்கும் பிரதான காரணியாக அமையும் எனவும் அவர் வலியுறுத்தினார்.