நாளை முதல் ஒற்றை-இரட்டை இலக்க முறையில் எரிபொருள்; QR குறியீடு கட்டாயம்

நாளை முதல் ஒற்றை-இரட்டை இலக்க முறையில் எரிபொருள்

நாளை முதல் ஒற்றை-இரட்டை இலக்க முறையில் எரிபொருள்; QR குறியீடு கட்டாயம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைவர் தெரிவித்துள்ளதன் படி, நாளை (19) முதல் வாகனப் பதிவு எண்களின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் ஒற்றை-இரட்டை முறையில் எரிபொருள் வழங்கப்படும்.

அதன்படி, வாகனத்தின் பதிவு எண்ணின் கடைசி இலக்கம் இரட்டை எண் (0, 2, 4, 6, 8) ஆக இருந்தால், இரட்டைப்படை நாட்களிலும், ஒற்றை எண் (1, 3, 5, 7, 9) ஆக இருந்தால், ஒற்றைப்படை நாட்களிலும் மட்டுமே எரிபொருள் பெற முடியும்.

இதற்கிடையில், எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம் இன்று (18) முதல் QR குறியீட்டைக் காண்பித்தால் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

 சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ, QR குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்க முன்னர் அளிக்கப்பட்ட சலுகைகள் இனி செல்லுபடியாகாது என்றும், அவசர காலங்களில் கூட விதிமுறை இன்றி எரிபொருள் வழங்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.

QR குறியீட்டில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், எரிபொருள் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு 1919 என்ற எண்ணுக்கு அழைத்து அவற்றைச் சரிசெய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். "முன்னதாக QR குறியீடு இல்லாமலேயே எரிபொருள் வழங்கி சில சலுகைகளை அளித்தோம், ஆனால் இனிமேல் QR அமைப்பு மூலமாக மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்," என்று அவர் தெரிவித்தார்.