அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் நியாயமற்ற செயல்-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் போராட்டம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டமானது நியாயமற்றது, குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்ட ஒரு செயல் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடுமையான விமர்சனம்.
வேலைநிறுத்தத்திற்கு அடிப்படையாகக் கூறப்படும் பயிற்சி வைத்தியர்களின் நியமன விவகாரம் ஏற்கனவே முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிட்டது. பயிற்சி முடித்தவர்களில் 96.25% பேர் அரச சேவைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். எஞ்சிய மிகச் சிலரும் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.
தீர்க்கப்பட்ட விடயத்தை மீண்டும் எடுத்து, நோயாளிகளைப் பணயக்கைதிகளாக்குவது எவ்வகையிலும் நியாயமற்றது.நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில், சுகாதார சேவையைத் தடையின்றி வழங்க முயலும் அரசுக்கு இத்தகைய போராட்டம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
பேச்சுவார்த்தைக்குத் தீர்மானித்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டமை, சங்கத்தின் உண்மையான உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறத சங்கத்தின் தற்போதைய தலைமைத்துவம் வைத்தியத் துறையின் கௌரவத்தையே சீர்குலைப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
வேலைநிறுத்தத்தைப் புறக்கணித்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களை அமைச்சர் பாராட்டினார்.வைத்தியர்கள் உடனடியாகப் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்; தேவையற்ற அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குத் துணை போக வேண்டாம்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்வி கற்று, வைத்தியர்களாக உருவானவர்கள் அதே மக்களுக்குச் சேவை செய்ய மறுப்பது பாரிய அநீதியாகும். நாடு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுகாதார சேவையைத் தடையின்றி வழங்க முயன்று வரும் வேளையில், இவ்வாறான போராட்டங்கள் தேவையற்ற குழப்பங்களையே விளைவிக்கும்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக மீண்டும் ஒரு வேலைநிறுத்தத்தை அறிவித்தமையானது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றது. இவர்களின் தற்போதைய தலைமைத்துவம் வைத்தியத் துறையின் கௌரவத்தையே சீர்குலைக்கின்றது.
பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையைப் புறக்கணித்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருவதை நாம் பாராட்டுகின்றோம். எனவே, வைத்தியர்கள் உடனடியாகத் தமது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறும், தேவையற்ற அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குத் துணை போக வேண்டாம் என்றும் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்." - என்றார்.
Editor