கடந்த நான்கு ஆண்டுகளில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டது

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளில்,  இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டது

2018 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் பல்வேறு காரணங்களால் 200,000-க்கும் மேற்பட்ட நுன், சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் திரு. அனில் ஜெயந்தா, நாடாளுமன்றத்தில் இன்று (09) தெரிவித்தாா்.

அமைச்சர் கூறுகையில்,நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டும் ஒரு லட்சத்து எட்டாயிரம் (1,08,000)  சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், ஏனைய காரணங்களால் 155 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன என  அமைச்சர் கூறினார்

 அவர் மேலும் தெரிவிக்கையில்  நிறுவனங்களின் பட்டியல் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு முறை தயாரிக்கப்படுகிறது. கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இருப்பினும், 2018-2022 காலகட்டத்தில் மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, மொத்தம் 13 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. பத்து லட்சத்து முப்பத்தேழு ஆயிரம் நிறுவனங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. பொருளாதார நெருக்கடியால் மூடப்பட்டவற்றின் எண்ணிக்கை நூற்றுப் பத்து ஆகும். பொருளாதார நெருக்கடி அல்லாத பிற காரணங்களால் நூற்று ஐம்பத்தைந்து நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தப் புள்ளிவிவரங்கள், இலங்கையின் பொருளாதார நெருக்கடி சிறு மற்றும் நடுத்தர தொழில்களை எவ்வாறு கடுமையாகப் பாதித்துள்ளது என்பதைக் காட்டுகின்றன. எரிபொருள், மின் தடை, மூலப்பொருள் பற்றாக்குறை, வங்கிக் கடன் வட்டி உயர்வு, இறக்குமதி தடைகள் போன்ற காரணங்களால் பல வணிகங்கள் செயலிழந்துள்ளன.

2013-க்குப் பிறகு 2022 வரையிலான காலத்தில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டிருப்பதையும், மீதமுள்ள 1,37,000 நிறுவனங்களும் பல சவால்களை எதிர்கொள்வதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.