சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் தாக்குதல் உளவு விமானம் அழிப்பு

சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் தாக்குதல்

சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் தாக்குதல்   உளவு விமானம் அழிப்பு

சவுதி அரேபியாவில் அமைந்துள்ள பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம் (Prince Sultan Air Base) மீது கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான சுமார் 470 மில்லியன் டாலர் பெறுமதியான E-3 Sentry (AWACS) ரக உளவு விமானம் ஒன்று அழிக்கப்பட்டுள்ளதாக 

சர்வதேச ஊடகங்கள் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, இந்தத் தாக்குதலில் 81-0005 இலக்கத்தைக் கொண்ட விமானத்தின் ராடார் அமைப்பு மற்றும் உடற்பகுதி (Fuselage) கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்த விமானம் அமெரிக்காவின் 552nd Air Control Wing பிரிவைச் சேர்ந்தது எனவும், இது மீண்டும் பழுதுபார்க்க முடியாத அளவிற்கு (Beyond repair) சிதைந்துள்ளதாகவும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இத்தாக்குதலில் மேலும் சில KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானங்களும் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 12 அமெரிக்க சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க விமானப்படையின் "பறக்கும் ராடார் அமைப்பு" என அழைக்கப்படும் இந்த விமானம், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வரும் எதிரி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்டறிந்து வான்வழித் தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் முக்கிய கருவியாகும். தற்போது அமெரிக்காவிடம் இவ்வாறான 16 விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில், இது ஒரு பாரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்த பாரிய நிதி மற்றும் பாதுகாப்பு இழப்பு குறித்து உலகளாவிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும், அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் (US Central Command - CENTCOM) இதுவரை இது குறித்து உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளான Patriot ஏவுகணைகளின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமது பிராந்திய எல்லைகளுக்குள் அமெரிக்கா தலையிட்டால் இவ்வாறான தாக்குதல்கள் தொடரும் என ஈரான் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.