இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதல்

காலக்கெடு நெருங்கும் நேரம், ஈரான் தாக்குதல் தீவிரம்

இஸ்ரேலின் சில நகரங்களில் தீ பரவியுள்ளதாக ஆங்கில ஊடகம் தகவல்.

டொனால்ட் ட்ரம்பின் கடும் எச்சரிக்கையினால், இன்று செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய நேரப்படி மாலை 6:38 இற்கு ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை தொடராக நடத்தியுள்ளது. (இலங்கை நேரம் இரவு 8 40)

இன்று காலை முதல் குறைந்தது நான்கு கட்டங்களாக ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கியதாக ரைம்ஸ் ஒப் இஸ்ரேல் (The Times of Israel) செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதாக அல்ஜசீரா (Al Jazeera) செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர், டெல் அவிவ் அருகே உள்ள ரமத் ஹஷரோன் (Ramat Hasharon) பகுதியில் ஏவுகணை வீழ்ந்ததில் வாகனங்கள், வீதிகள், நடைபாதைகள் சேதமடைந்துள்ளதாக அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பீயெர்ஷெபா (Beersheba) நகருக்குத் தெற்கே உள்ள நியோட் ஹோவாவ் (Neot Hovav) தொழிற்சாலை மண்டலத்தில் ஈரானிய ஏவுகணை தாக்கியதில் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. 

ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடு நெருங்குவதால், நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாக த இந்து (The Hindu) செய்தித் தளம் கூறுகிறது.  

அதேநேரம், அல்ஜசீரா நேரடித் தகவல்களை வெளியிட்டு வருகிறது. 

அமெரிக்க நேரப்படி, இன்றிரவு 8 மணிக்கு முன்னர் (இலங்கை நேரம் நாளை புதன்கிழமை காலை 5.30) ஹாமூர்ஸ் நிரிணையை ஈரான் திறக்க வேண்டும் என ட்ரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்... 

அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்