புதிய ஒப்பந்தத்தில், ஈரான் கைச்சாத்திட வேண்டும் - ட்ரம்ப் அழுத்தம்!
புதிய ஒப்பந்தத்தில், ஈரான் கைச்சாத்திட வேண்டும் - ட்ரம்ப்
*கட்டளையிட வேண்டாம். ஈரான், பதில் எச்சரிக்கை
* திருத்தப்பட்ட புதிய முன்மொழிவை பாகிஸ்தான் எதிர்பார்ப்பு
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈரான் முன்வைத்த புதிய முன்மொழிவை அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக பொலிற்றிகஸ் ரூடே (politicstoday) என்ற செய்தித் தளம் கூறுகிறது.
சமாதான பேச்சு முட்டுக்கட்டையில் (Deadlock) உள்ளதால், ஈரான் விரைவில் "புத்திசாலித்தனமாக செயல்பட்டு" (Get smart soon) ஒப்பந்தம் ஒன்றில், கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் புதிய திட்டம் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது - போரை நிறுத்துவது குறித்து மட்டுமே கவனம் செலுத்தியிருந்தது.
ஆனால், ஈரானின் அணுசக்தி திட்டம் (Nuclear program) குறித்த விவாதத்தைப் போருக்குப் பின் தள்ளிவைக்க ஈரான் கோரியிருந்தது.
அணுசக்தி விவகாரத்தை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும் என்பதில் ட்ரம்ப் பிடிவாதமாக நின்றதால், ஈரான் முன்வைத்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.
அதேவேளை, அமெரிக்கா, ஏனைய நாடுகளுக்கு இனிமேல் கட்டளையிடும் நிலையில் இல்லை என்றும், தனது "நியாயமற்ற கோரிக்கைகளை" அமெரிக்கா கைவிட வேண்டும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளதாக அல ஜசீரா (Al Jazeera) செய்தி வெளியிட்டுள்ளது.
சமாதான பேச்சு முடங்கியுள்ள போதிலும், அடுத்த சில நாட்களில் ஈரானிடமிருந்து திருத்தப்பட்ட புதிய முன்மொழிவை மத்தியஸ்தரான பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் பதற்றம் நீடிக்கிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது.
அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்
Editor