ஜனாதிபதி அனுர குமார - அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் இடையே சந்திப்பு

ஜனாதிபதி அனுர குமார - அமெரிக்க விசேட பிரதிநிதி சந்திப்பு

ஜனாதிபதி அனுர குமார - அமெரிக்க விசேட பிரதிநிதியுடன்  இடையே சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவைப் பலப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

மேலும், நிலவும் மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் அந்த போர்ச் சூழலின் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்தும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்கத் தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். அமெரிக்கத் தூதுவர் செர்ஜியோ கோர் தலைமையிலான தூதுக்குழுவினரும் இதில் பங்கேற்றனர்.