ஜனாதிபதி அனுரவின் மே தின உரை !ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்குப் புகார் !

ஜனாதிபதி அனுரவின் மே தின உரை !

ஜனாதிபதி அனுரவின்  மே தின உரை !ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்குப் புகார் !

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 2026 மே 25 ஆம் தேதி வழங்கப்படவுள்ள நீதிமன்ற  தீர்ப்பு ஒன்று தொடர்பாக, மே தினக் கூட்டத்தில்  வெளியிட்ட கருத்து  குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரம் தொடர்பான சிறப்பு அறிக்கையாளருக்குப் புகார் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்."

நிலுவையில் உள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு முன்னறிவிப்பு இருப்பதாகவும், நிறைவேற்று அதிகாரம் நீதித்துறை செயற்பாட்டில் தலையிடும் அபாயம் இருப்பதாகவும் அந்த முறையீட்டில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது இலங்கையின் அரசியலமைப்பின் 111C(1), 111C(2) ஆகிய சரத்துகளையும், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தத்தின் (ICCPR) 14ஆவது சரத்தையும், ஐக்கிய நாடுகளின் நீதித்துறை சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் மீறுவதாக முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கருத்து தொடர்பாக விளக்கம் கேட்டு உடனடி அறிவிப்பை வெளியிடவும், சர்வதேச சட்டத்தின் கீழான கடமைகளை நினைவூட்டவும், நீதிப் பணிகளில் நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் இலங்கை அரசுக்கு இந்த முறையீட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தயாசிரி ஜயசேகர, மனோ கணேசன், ஜீவன் தொண்டமான், எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களே இந்த முறையீட்டில் கையெழுத்திட்டுள்ளனர். இது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு எதிர்வரும் மே 25ஆம் தேதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது