வினாத்தாள் கசிவு: முன்னாள் பணிப்பாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Question-paper-leak:-Supreme-Court-orders

வினாத்தாள் கசிவு: முன்னாள் பணிப்பாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

2024ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் இருந்து மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் மீதான தீர்ப்பில், கடந்த டிசம்பர் 31ஆம் திகதி உச்ச நீதிமன்றம் பிரேமதிலகவுக்கு எதிராக ரூபா 3 மில்லியன் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை நிறைவேற்றாததே இந்த நடவடிக்கைக்கு காரணமாகும்.

அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பிரேமதிலக, அத்தொகையை தனது சொந்த நிதியிலிருந்து செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், இதுவரை அந்த உத்தரவை நிறைவேற்றாத நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் அஞ்சன ரத்னசிறி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்கள் அச்சல வெங்கப்புல்லி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சட்டமா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், எதிர்வரும் மார்ச் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிரேமதிலகவுக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளாதக லங்காத்ருத் இணையத்தளத்தில் இந்தசெய்தி வெளியிட்டுள்ளது