38,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் கொழும்பு வந்தடைந்தது
38,000 மெட்ரிக் தொன் எரிபொருள்
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில், இன்று காலை 10 மணியளவில் எரிபொருள் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் உள்ளிட்ட மொத்தம் 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், இன்று முதல் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editor