மக்கள் வங்கியில் தொழில்நுட்பக் கோளாறு: உரிய தொகையை விட அதிகமான பணம்!
மக்கள் வங்கியில் தொழில்நுட்பக் கோளாறு!
மக்கள் வங்கி அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தும் பணப் பரிமாற்ற முறைமையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில வாடிக்கையாளர்களுக்கு உரிய தொகையை விட அதிகமான பணம் வழங்கப்பட்டதாக மக்கள் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வங்கி வெளியிட்ட ஊடக அறிக்கையின்படி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாணய மாற்று வீதத்தை மாற்றும் போது ஒரு நாணய அலகில் ஏற்பட்ட பிழையால் நிகழ்ந்தது. சமீபத்தில் இந்தப் பிழை கண்டறியப்பட்டதையடுத்து, அதை நிவர்த்தி செய்ய வங்கி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தக் கோளாறால் ஏற்பட்ட மதிப்பிடப்பட்ட நிதி இழப்பு சுமார் மில்லியன் 656 (ரூபாய் 65 கோடியே 60 லட்சம்) ஆகும். எனினும், இந்தத் தொகை ஏற்கனவே சம்பந்தப்பட்ட காலகட்டத்தின் கணக்கறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளதால், இனிமேல் எந்த நிதி தாக்கமும் எதிர்பார்க்கப்படவில்லை என வங்கி தெரிவித்துள்ளது.
அதிகமாகப் பெற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை திரும்ப வசூலிக்கும் நடைமுறை ஏற்கனவே வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிழை கண்டறியப்பட்டவுடன் வங்கி உள்ளக விசாரணை நடத்தியதோடு, செயல்முறைகளை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட ஒழுங்குமுறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலைமை வங்கியின் நிலைத்தன்மையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று மக்கள் வங்கி வலியுறுத்துகிறது. சுமார் රු. ட்ரில்லியன் 3.8 சொத்துக்களைக் கொண்ட வலுவான நிதி நிறுவனமாக தாம் விளங்குவதாகவும், வாடிக்கையாளர் வைப்புகளின் பாதுகாப்பிற்கோ, இலாபத்திற்கோ, அன்றாட வங்கி சேவைகளுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் வங்கி உறுதியளித்துள்ளது.
டிஜிட்டல் வங்கி சேவைகள் உள்பட அனைத்து வாடிக்கையாளர் சேவைகளும் தற்போது இயல்பாக செயல்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editor