ஈரான் மீதான மின் தாக்குதலை டிரம்ப் ஐந்து நாட்கள் ஒத்திவைப்பு
ஈரான் மீதான மின் தாக்குதலை ஒத்திவைப்பு
மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மின் உள்கட்டமைப்பு மீது தாம் முன்வைத்த தாக்குதல் அச்சுறுத்தலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். “பயனுள்ள” பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, ஈரான், தனது மின் கட்டமைப்பை “அழித்தொழிக்கும்” என டிரம்ப் மேற்கொண்ட ஆரம்பகட்ட அச்சுறுத்தலுக்கு பதிலடியாக, இஸ்ரேலின் மின் நிலையங்கள் மீதும், பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்திருந்தது.
இரு தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் தனது அச்சுறுத்தலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த ஐந்து நாள் அவகாசம், இராஜதந்திர முயற்சிகளுக்கான வாய்ப்பாக அமையக்கூடும் என அவதானிகள் கருதுகின்றனர்
Editor