யாழ் வருகை தருகின்ற ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்

ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்

யாழ்  வருகை தருகின்ற ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் உள்ள பல தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா. குழுவின் இந்தச் சந்திப்பு, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள், மாகாணசபைகளின் அதிகாரப் பகிர்வு, மீள்குடியேற்றத்தில் உள்ள இடையூறுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்  ஏப்பிரல் மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர்.

யாழ்ப்பாணம் வருகை தரும் ஐரோப்பிய யூனியன் குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரூமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.