அரசைக் கவிழ்க்க பாதாள உலகக் குழுக்கள் சதி – ஜனாதிபதி குற்றச்சாட்டு

அரசைக் கவிழ்க்க பாதாள உலகக் குழுக்கள் சதி !

அரசைக் கவிழ்க்க பாதாள உலகக் குழுக்கள் சதி – ஜனாதிபதி குற்றச்சாட்டு
அரசைக் கவிழ்க்க பாதாள உலகக் குழுக்கள் சதி – ஜனாதிபதி குற்றச்சாட்டு
அரசைக் கவிழ்க்க பாதாள உலகக் குழுக்கள் சதி – ஜனாதிபதி குற்றச்சாட்டு

பாதாள உலகக் குழுக்களினதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களினதும் நிதியுதவியுடன் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிக்கவெரட்டியவில் ‘இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு ஆசீர்வாதம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில், சட்டவிரோதப் பணம் போராட்டங்கள், பேரணிகள், இணையத்தளங்கள் மற்றும் யூடியூப் அலைவரிசைகளில் முதலீடு செய்யப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இத்தகைய நடவடிக்கைகளின் நோக்கம் பாதாள உலகக் குழுக்களையும் போதைப்பொருள் வலையமைப்புகளையும் பாதுகாப்பதே எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளிலும் மல்வத்தையிலும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இவ்வாறான சதித்திட்டங்களுக்கு அரசாங்கம் அஞ்சப்போவதில்லை என்றும் வலியுறுத்தினார்.

அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் ஒழித்து, மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய அரசாங்கங்களால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு மீண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகம், அமைதி, சுற்றுலாத்துறை மற்றும் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கையின் சர்வதேச நிலை மேம்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என அறிவித்த ஜனாதிபதி, நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார மாற்றத்துக்கான திட்டங்கள் அதில் உள்ளடக்கப்படும் என்றும் தெரிவித்தார்.