ஈரான் மீதான வெற்றி: 'எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை' - நேட்டோவுக்கு டிரம்ப் பதில்

ஈரான் மீதான வெற்றி: 'நேட்டோவுக்கு டிரம்ப் பதில்

ஈரான் மீதான வெற்றி: 'எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை' - நேட்டோவுக்கு டிரம்ப் பதில்

ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தொடங்கியுள்ள இராணுவ நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான நேட்டோ நாடுகள் ஆதரவு அளிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றன.

ஈரானிடம் அணுகுண்டு இருக்கக்கூடாது என பல நாடுகள் ஒப்புக்கொண்டாலும், நடவடிக்கையில் பின்தங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

"நேட்டோ என்பது ஒரு 'ஒருவழிப் பாதை' அமைப்பாக மாறிவிட்டது. அமெரிக்கா ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை செலவழித்து மற்ற நாடுகளை பாதுகாக்கிறது. ஆனால், எங்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் அவர்கள் எதுவும் செய்வதில்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களால் ஈரானின் கடற்படை, விமானப்படை, வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் அமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், ஈரானிய ஆட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள தலைவர்கள் அகற்றப்பட்டதால், அவர்கள் இனி அமெரிக்காவுக்கோ அல்லது உலகுக்கோ எந்த அச்சுறுத்தலாகவும் இருக்க மாட்டார்கள் என்று அவர் உறுதியளித்தார்.

தான் அடைந்துள்ள இராணுவ வெற்றிகளைக் கருத்தில் கொண்டு, இனி நேட்டோ அல்லது ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற வேறு எந்த நாட்டின் ஆதரவும் தனக்குத் தேவையில்லை என அதிபர் வலியுறுத்தினார்

. "உலகில் எங்கும் மிகவும் சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா விளங்குகிறது. எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை" என்று அவர் கூறியுள்ளார்.