மத்திய கிழக்கில் போர்: ஜனாதிபதி அனுர குமார தலைமையில் ஆலோசனை
மத்திய கிழக்கில் போர்: ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை
மத்திய கிழக்கு யுத்த நிலை காரணமாக உலகெங்கிலும் உருவாகியுள்ள நெருக்கடி மற்றும் அதனை எதிர்கொள்ள நடவடிக் கைகள் குறித்து ஆய்வு செய்யும் கலந்துரையாடல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (மார்ச் 19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத் தில் நடைபெற்றது.
உலக எரிசக்தி சந்தையில் எதிர் கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் அடுத்த சில மாதங்களில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக, மத்திய கிழக்கு யுத்தத் தின் விளைவாக இலங்கை யின் ஆற்றல் விநியோக சங்கிலி பாதிக் கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, 2025 ஆம் ஆண்டில் அடைந்த பொருளாதார வெற் றியை நிலைநாட்டும் வகையில் எரிசக்தி விநியோகத்தை தொடர்ந்தும் செயல்படுத்துவது, விலை மேலாண்மையை சிறந்த முறையில் கையாள்வது போன்ற முக்கிய நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டன.
ஜனாதிபதி, இந்த நெருக்கடியின் போது நாட்டின் பொருளாதார மீதான பாதிப்பை குறைப்பதற்கும், சமூக நலனுக்கு உதவும் உதவி திட்டங்களை செயல்படுத்து வதற்கும் நடவடிக்கைகள் எடுக் கப்பட வேண்டும் என்று அறிவுறுத் தினார்.
Editor