மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம்” – ஜனாதிபதி உறுதி
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம்” – ஜனாதிபதி
“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்குரிய பொறுப்பு எமக்கு உள்ளது. இது விடயத்தில் காணி பிரச்சினை உள்ளது. அப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
அவ்வாறு தீர்த்து காணி உரிமை மற்றும் வீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்கும் அரசுதான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும்.”
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற“மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம்” என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் (National People’s Power) மே தினக் கூட்டம் நுவரெலியாவில் நடைபெற்றத கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ இந்த மண்ணில் தாத்தா உழைத்து கஷ்டப்பட்டார், அம்மா கஷ்டப்பட்டார். எனவே, அவர்களின் பிள்ளைகள் மீள்வதற்கு கல்விதான் சிறந்த வழி. அதற்குரிய வளங்களை, வசதிகளை நிச்சயம் நாம் வழங்குவோம்.
நாம் ஆட்சிக்குவந்து ஒன்றரை வருடமே ஆகின்றது. இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது. மக்கள் அரசு பக்கம் நின்கின்றனர். இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாகும். இந்நாட்டை படிப்படியாகக் கட்டியெழுப்புவோம். இதற்குரிய திட்டம் எம் வசம் உள்ளது.
இந்நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அதிகளவில் சிறைக்குச் செல்லும் வருடமாக 2026 அமையக்கூடும்.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.'
Editor