ரத்துகல மிலக ஆதிவாசி தலைவராக நிஷாந்த குமார் நியமனம்
ரத்துகல மிலக ஆதிவாசி தலைவராக நிஷாந்த குமார் நியமனம்
காலம் சென்ற ரத்துகல ஆதிவாசி தலைவர் சுட வன்னில பவனின் இறுதிச் சடங்குகள் இன்று (09)மாலை, அவரது வீடு அமைந்திருந்த இடத்தில் அரச அனுசரணையுடன் சிறப்பாக நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, தோர மரபின்படி புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்.
அரசின் அனுசரணையில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்கள் மற்றும் ஆதிவாசி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தம்பான ஆதிவாசி தலைவர் ஊருவரிகே வன்னிலா அத்தோ உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மஹா சங்கம் சமய நிகழ்வுகளை நடத்திய பின்னர், இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டு, உரைகள் நிகழ்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஆதிவாசி மரபுப்படி வில்லும் அம்பும் ஏந்திய ஆதிவாசிகள் முன்னணியில் நடந்து சென்று, உடலை குடும்ப எடுத்துச் சென்று தகனம் செய்தனர்.
தகனச் சடங்கு நிறைவடைந்த பின்னர், ரத்துகலுக்கான புதிய ஆதிவாசி தலைவர் தேர்வு செய்யப்பட்டார். மறைந்த ஆதிவாசி தலைவர் சுட வன்னிலவின் மகனும், தனிகல மஹ பண்டாரலவைச் சேர்ந்தவருமான நிஷாந்த குமார், தலைமுறை தலைமுறையாக தொடரும் கேதிரிய மரபின் வில்லாளி ஆதிவாசி தலைவர் விஷ்வ கீர்த்தி வனஸ்பதி உரு வரியால், ரத்துகல மிலக புதிய ஆதிவாசி தலைவராக நியமிக்கப்பட்டார்.
Editor