மஹிந்த ராஜபக்ஷ, பியங்கரவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை

மஹிந்த ராஜபக்ஷ, பியங்கரவுக்கு அழைப்பாணை

மஹிந்த ராஜபக்ஷ, பியங்கரவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கான எயார்பஸ் விமான கொள்வனவில் பெரும் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை முன்னிலைப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது.

ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறிப்பிட்ட இருவரும் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமான உற்பத்தி நிறுவனமான எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்யும் நடைமுறையில் பாரிய ஊழல்களும் நிதி முறைகேடுகளும் நிகழ்ந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான மேலதிக புலன்விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.