‘ஜன நாயகன்’ பட வெளியீடு குறித்து இறுதி முடிவும் வெளியாகவில்லை தலைமைத் தேர்தல் அலுவலர்
‘ஜன நாயகன்’ பட வெளியீடு குறித்து இறுதி முடிவும் வெளியாகவில்லை
தமிழ்நாட்டில் தேர்தல் பொது நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிடத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவையா என்பது தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவரிடம், படத்தின் தணிக்கை ஒப்புதல் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், வேட்பாளராக உள்ள ஒரு கட்சித் தலைவரின் படத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது வெளியிட அனுமதி பெற வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அர்ச்சனா பட்நாயக், “இது நல்ல கேள்விதான். இது முதன்முறையாக நடக்கும் சம்பவம். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுப் பதிலளிக்கிறேன்” என்று கூறினார். பின்னர், டெல்லி தேர்தல் ஆணைய அலுவலக அதிகாரியுடன் நேரடியாகத் தொலைபேசியில் கலந்துரையாடி, இது தொடர்பாக விளக்கம் பெற்றுள்ளார்
தற்போது வரை இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு வெளியாகவில்லை. ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டுக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்குமா என்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் அதன் அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தலைமைத் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Editor