ஒழுக்கமும் பயிற்சியுமே போக்குவரத்துப் பாதுகாப்புக்கு அடிப்படை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
ஒழுக்கமும் பயிற்சியுமே போக்குவரத்துப் பாதுகாப்புக்கு அடிப்படை
போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் பெரும் பணியாற்றியுள்ள போதிலும், சரியான பயிற்சியும் ஒழுக்கமும் இல்லாதபோது வீதிப் பாதுகாப்பு இழக்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் சிறப்புப் பயிற்சிப் பட்டறையில், "சீரற்ற போதைப்பொருள் பரிசோதனையின் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள்" என்ற தலைப்பில் நிறுவன மட்ட அதிகாரிகளை உணர்வூட்டும் வகையில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஆண்டுக்கு 2,700-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2029-ஆம் ஆண்டளவில் உயிரிழப்புகளை பெருமளவு குறைப்பதே இலக்கு.தற்போது 15% முதல் 18% வரையிலான மக்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். 53% விபத்துகள் ஓட்டுநர்களின் பிழைகளாலேயே ஏற்படுகின்றன.
ஒழுக்கமும் பயிற்சியுமே போக்குவரத்துப் பாதுகாப்புக்கு அடிப்படை. இவை இல்லாமல் போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்த முடியாது.போக்குவரத்துச் செயற்றிட்டத்தின் படி பயணிகள் பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. தரப்படுத்தப்பட்ட பேருந்துகள் மற்றும் நாட்டிற்குப் பொருத்தமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் அனைத்தும் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த தேசிய பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க சமூகப் பாடமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
Editor