2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் யாரும் தலையிடக் கூடாது என்று விசாரணை நடவடிக்கைகளில் தலையீடு என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் பெரும் அநீதியாகும் என்று என்றும் அருட்தந்தை வலியுறுத்தினார்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட அந்த தாக்குதலில், கொழும்பு புனித அந்தோனியார் ஆலயம், புனித செபஸ்தியார் ஆலயம் மற்றும் பிரபல விடுதிகள் உள்ளிட்ட பல இடங்கள் குறிவைக்கப்பட்டன. ஈஸ்டர் ஆராதனையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் உட்பட சுமார் 300 பேர் வரையில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை "கொடூரமான தாக்குதல்" மற்றும் "படுகொலை" என அருட்தந்தை வர்ணித்தார். "இந்த தாக்குதலுக்கான முழு உண்மையும் வெளிவர வேண்டும். அப்போதுதான் நாட்டில் சட்டத்தின் ஆட்சி முறையாக நிலைநாட்டப்படும். இல்லையெனில், பெரும் குற்றங்கள் புரிந்துவிட்டு தண்டனையின்றி தப்பித்துவிடலாம் என்ற தவறான செய்தியே சமூகத்தில் பரவும்," என்று அவர் எச்சரித்தார்.தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இந்த வழக்கை சுயாதீனமாக விசாரித்து வருவதாக அவர் கூறினார்.
அரசியல் காரணங்களுக்காக இந்த விசாரணையை பாதிப்பது கூடாது என்றும், புலனாய்வாளர்கள் தங்கள் பணியை சுதந்திரமாக செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விசாரணையில் தலையிடுவது, உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் எதிரான மற்றுமொரு குற்றமாக அமையும் என்று அவர் எச்சரித்தார். பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், விசாரணைகள் முடிவடையும் வரை காத்திருந்து, அதன் பின்னர் உரிய முடிவுகளை எதிர்பார்க்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், இந்த தாக்குதலுக்கு அரசியல் பின்னணி ஏதும் உள்ளதா, அதற்கு பொறுப்பானவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும், முழு உண்மையும் வெளிப்பட வேண்டும் என்றும் அருட்தந்தை வலியுறுத்தினார்.