சர்வதேச கவனம் பெற்ற “எஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவு
சர்வதேச கவனம் பெற்ற “எஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணம்
உலக அமைதியை முன்னிறுத்தி அமெரிக்காவில் இருந்து வருகை தந்த பிக்குகள் குழுவும், வணக்கத்திற்குரிய பண்ணாகார தேரர் தலைமையிலான “ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணம் இன்று (28) கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் பெரும் பக்தி உணர்வுடன் நிறைவடைந்தது.
உலக அமைதியை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைபயணம், ஏப்ரல் 22ஆம் தேதி தம்புள்ளையிலிருந்து வண. பண்ணாகார தேரர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து வருகை தந்த 13 பிக்குகள் குழுவும் இதில் இணைந்திருந்தது. நடைபயணத்துடன் “அலோகா” எனப்படும் நாயும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மாத்தளை, கண்டி, பெல்லிகம்மான, தொலங்கமுவ, யக்கல போன்ற பல பகுதிகளை கடந்து இந்த குழு கெலனிய ரஜமஹா விகாரையை அடைந்தது. அங்கு இன்று காலை தம்ம உரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அமைதி நடைபயணத்தின் இறுதி நாளில், பிக்குகள் குழு களனி விகாரையிலிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி புறப்பட்டது. பாதை முழுவதும் பெருமளவான பக்தர்கள் திரண்டு நடைபயணத்தை கண்டு வணக்கம் செலுத்தினர்.
சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற நிறைவு நிகழ்வில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, புனித ஜயஸ்ரீ மஹா போபோதிமர கன்றை வண. பண்ணாகார தேரரிடம் சடங்குபூர்வமாக வழங்கினார்.
பின்னர் மஹா சங்கத்தின் ஆசீர்வாதங்களுடன், அந்த புனித போதி கன்று மற்றும் புனித தாது ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டன. இதன் மூலம் “எஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது.சர்வதேச கவனம் பெற்ற “எஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவு
Editor