இந்தியாவில் முதல் முறையாக கருணைக் கொலை: 13 ஆண்டு கோமாவுக்கு முற்றுப்புள்ளி

இந்தியாவில் முதல் முறையாக கருணைக் கொலை:

இந்தியாவில் முதல் முறையாக கருணைக் கொலை: 13 ஆண்டு கோமாவுக்கு முற்றுப்புள்ளி

கடந்த 2013ஆம் ஆண்டு நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த  சண்டிகரை பகுதியைச் சேர்ந்த ஹரீஷ் ராணா (வயது 38) மண்டையில் பலத்த காயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது மூளைப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால், அவர் ‘பெர்சிஸ்டென்ட் வெஜிடேடிவ் ஸ்டேட்’ (Persistent Vegetative State) எனப்படும் ‘மீள முடியாத கோமா’ நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கடந்த 13 ஆண்டுகளாக அவருக்கு உடல் இயக்கங்கள் எதுவுமின்றி, ஒரு குழாய் மூலம் வழங்கப்படும் திரவ உணவு மற்றும் நீர் மூலமே உயிர் காக்கப்பட்டு வந்தது.

ஏறத்தாழ 13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை (passive euthanasia) செய்ய அனுமதிக்குமாறு அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி. பரிதிவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின் முடிவில், நாட்டிலேயே முதல் முறையாக ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய (உயிர் துணைக் கருவிகளை நிறுத்த) அனுமதித்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்டு வந்த உயிர் காக்கும் செயற்கை உணவுக் குழாய் அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே அவர் அமைதியாக உயிர் பிரிந்தது.

இந்த வழக்கு, இந்தியாவில் ‘செயற்கை வாழ்க்கைத் துணைக் கருவிகளை நிறுத்துதல்’ (passive euthanasia) தொடர்பான சட்ட முன்னுதாரணமாக அமைந்துள்ளது. நோயாளி முற்றிலும் மீள முடியாத நிலையில் இருந்தால், அவரது விருப்பத்தின் பேரிலோ அல்லது உறவினர்களின் மனுவின் பேரிலோ உயிர் துணைக் கருவிகளை நிறுத்த நீதிமன்றம் அனுமதி வழங்க முடியும் என்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியது.