இந்தியா மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் யாழில்  பகிரங்க ஏலம்!

இந்தியா மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள்

இந்தியா மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் யாழில்  பகிரங்க ஏலம்!

இலங்கைக் கடல் எல்லையை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் அரச உடமையாக்கப்பட்டன. அந்தப் படகுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் நீண்டகாலமாக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று திணைக்களத்தால் பகிரங்க ஏல விற்பனை நடத்தப்பட்டது. இந்திய மீனவர்களின் படகுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புக்கள், மின்கலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் ஏலத்தில் விடப்பட்டன. இலங்கையைச் சேர்ந்த படகுகளின் பொருள்களும் இதேவேளை ஏலம் விடப்பட்டன.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொண்டு போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தில் பங்கேற்று தமக்குத் தேவையான பொருள்களை வாங்கினர். இந்த ஏல விற்பனை மூலம் கணிசமான அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடல் எல்லை மீறல் தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் கைப்பற்றப்படும் சொத்துக்களை இவ்வாறு பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்வது அரசுக்கு வருவாய் ஈட்டும் வழிமுறையாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.