எரிபொருள் பதுக்கல் சோதனைகள் தீவிரம்: 46487 லிட்டர் பெட்ரோல் , டீசல் பறிமுதல்
எரிபொருள் பதுக்கல் சோதனைகள் தீவிரம்
நாட்டில் எரிபொருள் நெருக்கடியை உருவாக்கத் திட்டமிட்டவர்களை கண்டறியும் நோக்கில், மறைத்து வைக்கப்பட்ட எரிபொருள் பதுக்கல்கள் மீதான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சோதனைகளின் ஒரு பகுதியாக, சட்டவிரோத நடமாடும் எரிபொருள் விநியோகக் கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (27) நிலவரப்படி, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மொத்தம் 44,473 லிட்டர் டீசலும், 2,014 லிட்டர் பெட்ரோலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த எரிபொருள் நெருக்கடி தற்போது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் கடத்தல்காரர்கள் மற்றும் பதுக்கல்காரர்களை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், எரிபொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் ஏதேனும் தகவல்கள் இருப்பின் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Editor