இந்தியாவிலிருந்து எரிபொருள் கப்பல் இலங்கை வந்தடையந்தது

இந்தியாவிலிருந்து எரிபொருள் வந்தடையந்தது

இந்தியாவிலிருந்து  எரிபொருள் கப்பல் இலங்கை வந்தடையந்தது

இந்திய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து எரிபொருள் கப்பலொன்று இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதில் 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோல் அடங்கியுள்ளதாக அதன் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற  தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்தே இந்தக் கப்பல் இலங்கையை வந்தடைகிறது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்பதற்காக இந்தியாவிற்கும் இலங்கையிற்கும் இடையில் உயர்மட்ட இராஜதந்திர தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, லங்கா ஐ.ஓ.சி (Lanka IOC) நிறுவனத்திற்கு எரிபொருள் கப்பலொன்றை அனுப்ப இந்திய எண்ணெய் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அடுத்த மாதத்திற்குள் 10 எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளன.

டீசல் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரையிலும், 92 மற்றும் 95 ரக பெற்றோல் ஜூன் மாதம் வரையிலும் போதுமான அளவு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.