துப்பாக்கியால் மக்களை மிரட்டும் சம்பவங்கள்!!!

துப்பாக்கியால் மக்களை மிரட்டும் சம்பவங்கள்!!!

துப்பாக்கியால் மக்களை மிரட்டும் சம்பவங்கள்!!!
துப்பாக்கியால் மக்களை மிரட்டும் சம்பவங்கள்!!!
துப்பாக்கியால் மக்களை மிரட்டும் சம்பவங்கள்!!!
துப்பாக்கியால் மக்களை மிரட்டும் சம்பவங்கள்!!!
துப்பாக்கியால் மக்களை மிரட்டும் சம்பவங்கள்!!!
துப்பாக்கியால் மக்களை மிரட்டும் சம்பவங்கள்!!!

* பிரேமலால் ஜயசேகர, லோஹன் ரத்வத்தே, அமர கீர்த்தி அத்துகோரள வரிசையில் அர்ச்சுனா! 

* நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் குற்றம்...

* உயர் நீதிமன்றத்திற்கும் பாரப்படுத்தப்படலாம்...

* உறுப்பினர் பதவிக்கு தற்காலிக தடையும் வரலாம்... 

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் அரசியல் பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கிகளை பொதுமக்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இதனால் மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன...

'சொக்கா மல்லி' என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற முன்னள் உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, இந்த ஏப்ரல் மாதம், நுவரெலியாவில் ஒருவரை துப்பாக்கி காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். 

சம்பவத்தின் போது அவரிடம் இருந்த துப்பாக்கி உரிமம் 2025 ஆம் ஆணடு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகி இருந்தாக பொலிஸார் கூறியிருந்தனர்

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சென்ற 22 ஆம் திகதி அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதவான் புஷ்பிகா ஜயதாச, அவரை 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

கடவுச்சீட்டை (Passport) நீதிமன்றம் முடக்கியுள்ளதுடன், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது என்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

அதேவேளை, 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அப்போதைய சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இருந்த லோஹன் ரத்வத்தே, அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் புகுந்து தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட்டு துப்பாக்கி முனையில் மிரட்டியிருந்தார்.

இந்த விவகாரம், ஐ.நா. மனித உரிமைச் சபையின் (UNHRC) 48 ஆவது கூட்டத்தொடரின் போது, முக்கியமான விவாதப் பொருளாக இருந்தது. 

சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) போன்ற சர்வதேச அமைப்புகள், பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், அமைச்சர் தனது செயல்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் வலியுறுத்தின.

இதன் காரணமாக, லோஹன் ரத்வத்தே அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். 2025 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் அவர் இயற்கை மரணமடைந்தார். 

2022 ஆம் ஆண்டு காலிமுகத் திடல் கிளர்ச்சியின் போது, நிட்டம்புவ பகுதியில் தனது காரை மறித்த போராட்ட குழுக்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர், அமர கீர்த்தி அத்துகோரள துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

இச்சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், பின்னர் அந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இறந்தார். 

ஆகவே, நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா இராமநாதன் மீது யாரும் உறுப்பினர் ஒருவர் சிறப்புரிமை (Privilege) மீறில் பிரச்சினை ஒன்றை எழுப்பினால், சபாநாயகரின் விசாரணைக்கு அர்ச்சுனா உட்பட நேரிடும்.

நிலையியல் கட்டளை (Standing Orders) சட்டம் எனப்படும், உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறிகள் (Code of Conduct for Members of Parliament) உள்ளன.

ஒழுக்கவியல் - சிறப்புரிமைகள் மீதான குழு (Committee on Ethics and Privileges) உறுப்பினர்கள் ஒழுக்கீனமாக நடந்துகொண்டால் அல்லது தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால், அது குறித்து இக்குழு விசாரணை நடத்தும்...

எந்தவொரு பொதுமகனும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தவறான நடத்தை குறித்து, மற்றொரு உறுப்பினர் ஊடாக சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யலாம்.

ஒழுக்க நெறியின் படி, ஒரு உறுப்பினரின் செயல் குற்றவியல் சட்டத்தை (Criminal Law) மீறயிருந்தால், அந்த விவகாரத்தை உடனடியாக பொலிஸாரிடம் அல்லது சம்பந்தப்பட்ட சட்ட அதிகாரிகளிடம், நாடாளுமன்ற சிறப்புக் குழு ஒப்படைக்க வேண்டும். 

விசாரணையில் ஒரு உறுப்பினர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டால், நாடாளுமன்றம் தண்டனைகளை வழங்கும்...

அதன் பிரகாரம், 

A) குறிப்பிட்ட காலத்திற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம்.

B) சபை முன்னிலையில் அவருக்கு எதிராகக் கண்டனம் (Censure/Reprimand) தெரிவிக்கப்படலாம்.

C) நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ், சில கடுமையான விவகாரங்கள் உயர் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்பட்டு மேலதிக தண்டனைகள் விதிக்கப்படலாம்...

இங்கே யார் சரி, யார் பிழை என்பது அல்ல. 

ஆனால், அர்ச்சுனா, கிளிநொச்சியில் அதுவும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஒன்றில் வாழும் அப்பாவி மக்களை, துப்பாக்கியால் அச்சுறுத்தியமை என்பது மன்னிக்க முடியாத குற்றம்....

ஒற்றையாட்சி சட்டங்கள் தமிழர்களை ஒடுக்குவதாக வாதிட்டுக் கொண்டிருக்கும் சூழலில், நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, தமிழ் பிரதிநிதி ஒருவர் இவ்வாறு செயற்பட்டமை பெரும் குற்றம்

ஈழத்தமிழர்களின் கூட்டுரிமைக்காக வாதிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் பிரதிநிதியாக காண்பிக்கும் உறுப்பினர் ஒருவர், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது நாகரிகமற்ற செயல்...

ஆகவே, தமிழர் பிரதேசங்களில் - பொதுவெளியில் அர்ச்சுனா மீது தமிழ்த்தேசிய கட்சி உறுப்பினர்கள் பகிரங்கமாக கண்டனம் வெளியிட வேண்டும்....

இலங்கை நாடாளுமன்றத்தில் அல்ல... 

ஏனெனில், இந்த ஒற்றையாட்சி அரசு, “சார்புத்தன்மை” - ”தமிழ்த்தேசிய வெறுப்புத் தன்மை” என்ற காரண - காரியங்களின் பிரகாரம், சுட்டிக்காட்டப்பட்ட மேற்படி ஒழுக்க விதிகளின் கீழ் விசாரணையை நடத்தாமலும் தவிர்க்கலாம்...

அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்