மகிந்த பற்றி பேசும் போது சஜித் பிரேமதாச அழுது புலம்புவது ஆச்சரியமான விடயம் ! சமீர பெரேரா

மகிந்த பற்றி பேசும் போது சஜித் பிரேமதாச அழுது புலம்புவது ஆச்சரியமான விடயம் !

மகிந்த  பற்றி பேசும் போது சஜித் பிரேமதாச அழுது புலம்புவது  ஆச்சரியமான விடயம் !  சமீர பெரேரா
மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடி மற்றும் குற்றங்கள் தொடர்பாக சட்டத்தை செயல்படுத்துவது 
குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட அறிவிப்புகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கும் பதில்
நகைப்புக்குரியது என்று இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவிக்கிறது.
இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா ஹேட்டன் நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில்
கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.
அங்கு கருத்து தெரிவித்த தலைவர், "கடந்த மே மாதம் ஜனாதிபதியால் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில்
மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பை எதிர்க்கட்சி வேண்டுமென்றே திரித்து மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது" என்று குறிப்பிட்டார்.
மேலும், அங்கு ராஜபக்ஷவர்களின் வழக்குகள் குறித்து பேசும்போது சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் அழுது வீழ்ந்தது ஆச்சரியமான விடயம்
என்றும், இவ்வாறு "குழந்தைத்தனமாக" நடந்து கொள்ளும் எதிர்க்கட்சி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால்,
இந்த நாட்டு மக்கள் குழந்தைகள் அல்லர் என்பதை வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
"ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், ஊழல்கள், காணாமலாக்குதல்கள் மற்றும் கொலைகள்
குறித்து மக்களுக்கு இன்னும் தெளிவான நினைவு உள்ளது. குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் போன்ற மிருகத்தனமான
குற்றங்களுக்குப் பின்னாலுள்ள உண்மையைக் கண்டறிவது மக்கள் அனைவரின் விருப்பமாகும்.
அந்த நீதியை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாகும், அது எந்த வகையிலும் நீதித்துறையில் தலையிடுவதல்ல.
கடந்த காலத்தில் இருந்தது போன்று வழக்குகளை ஒடுக்குதல், ஒப்பந்தங்கள் செய்தல் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை
வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஊழல் கலாச்சாரம் இனி தொடரக்கூடாது என்பதை இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணி என்பதால் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மேலும், மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு அதிகாரத்தை வழங்கியிருப்பது, இத்தகைய தவறு செய்தவர்களுக்கு சரியான
தண்டனைகளை வழங்கி நாட்டில் நீதியை நிலைநிறுத்தும் ஒரு முறையை ஸ்தாபிப்பதற்காகவே எனக் கூறி சமீர பெரேரா தனது கருத்துக்களை
நிறைவு செய்தார்.