கர்நாடகா – ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு வயது நிர்ணயம்
இந்தியாவில் சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இரண்டு மாநில அரசுகள் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
கர்நாடகா அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.
அதேவேளை ஆந்திரப் பிரதேசம் அரசு, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. சிறுவர்கள் இணையத்தில் எதிர்கொள்ளும் அபாயங்களைத் தடுக்கவும், அவர்களின் மனநலம் மற்றும் கல்வி வளர்ச்சியைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள், இணையத் துன்புறுத்தல்கள் மற்றும் அதிகப்படியான பயன்பாடு போன்றவை சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த கட்டுப்பாடுகள் அவசியம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் சிறுவர்களின் இணையப் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Editor