மஹிந்தானந்த அறக்கட்டளையின் சொத்துகள் ரயில்வே துறைக்கு மீள ஒப்படைப்பு

மஹிந்தானந்த அறக்கட்டளையின் சொத்துகள் மீள ஒப்படைப்பு

மஹிந்தானந்த அறக்கட்டளையின் சொத்துகள் ரயில்வே துறைக்கு மீள ஒப்படைப்பு

சுமார் 20 ஆண்டுகளாக குத்தகை அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்த மஹிந்தானந்த அறக்கட்டளைக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் இலங்கை ரயில்வே துறைக்கு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மஹிந்தானந்த அலுத்த்கமகே அறக்கட்டளை, ரயில்வே துறைக்கு சொந்தமான நிலப்பரப்பில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே துறைக்கு சொந்தமான நிலப்பரப்பில் இயங்கி வந்த மஹிந்தானந்த அலுத்கமகே அறக்கட்டளை மற்றும் அதனுடன் தொடர்புடைய காணிகளை மீளப் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

அந்த அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்றைய தினம் (02) காலை, அறக்கட்டளையின் செயலாளர் சாமிக தர்மதிலக அவர்கள், அறக்கட்டளையின் கட்டிடங்கள் மற்றும் நிலப்பரப்புகளை ரயில்வே துறை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தார்.

இந்த நிலப்பரப்பு எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பொதுச் சந்தை உள்ளிட்ட பொதுநல நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை, அரச சொத்துக்களை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வளங்களை மீள ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.