ஈரான் மக்களுக்கு புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமேனி நன்றி தெரிவிப்பு
ஈரான் மக்களுக்கு புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமேனி நன்றி தொிவிப்பு
அமெரிக்கா සහ இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் முன்னெடுத்துள்ள போரின் போது, ஈராக் செயற்பட்ட விதம் குறித்து ஈரானின் புதிய உச்சத் தலைவா் மொஜ்தபா காமேனி, அந்நாட்டு மதகுருமார்களுக்கும் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஈராக் இஸ்லாமிய உயர் சபையின் சபாநாயகர் மற்றும் ஈரானிய தூதர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, காமேனி அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று ஈராக் அதிகாரியிடம் கையளிக்கப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஈரானின் புதிய உயர் தலைவராக மொஜ்தபா காமேனி நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் பெயரில் பல எழுத்துப்பூர்வ செய்திகள் வௌியாகியுள்ள போதிலும், அவர் இதுவரை பொது வெளியிலோ அல்லது அரச தொலைக்காட்சியிலோ தோன்றவில்லை.
காமேனி மக்கள் முன் வராததைக் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மொஜ்தபா காமேனி உயிரிழந்துவிட்டதாகவோ அல்லது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பகாகவோ தெரிவித்துள்ளார்.
எனினும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகவே அவர் மக்கள் முன் தோன்றுவதைத் தவிர்த்து வருவதாக ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் முன்னாள் உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் முதல் நாளிலேயே உயிரிழந்தார். இருப்பினும், அவரது உடல் இதுவரை அடக்கம் செய்யப்படவில்லை என அந்த அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
Editor