கணினி ஹேக்கிங் மோசடிகளால் 3000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு –

கணினி ஹேக்கிங் மோசடிகளால் 3000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு –

கணினி ஹேக்கிங் மோசடிகளால் 3000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு –

கணினி ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மோசடிகளுக்கு தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் செயல்படும் நிபுணர்கள் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்டோர் கடந்த சில ஆண்டுகளில் இலக்காகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோசடிகளுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் கணினி அறிவு குறைவாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, கைப்பேசிகளில் உள்ள WhatsApp சேவையை ஹேக் செய்து, அதன்மூலம் பல மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இத்தகைய மோசடி செயல்களில் ஈடுபட்ட பல குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள பலருக்கு எதிராக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், கைப்பேசிகளுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான தகவல்களைப் பற்றி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்களின் கைப்பேசிகளில் இருந்து பணம் கோரும் தகவல்கள் வந்தால், அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் நேரடியாக தொடர்புகொண்டு சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது