மாகாண சபைத் தேர்தல் ஜனநாயக உரிமையை மறுக்கும் அரசின் போக்கு - இரா.சாணக்கியன் எம்பி

மாகாண சபைத் தேர்தல்: ஜனநாயக உரிமையை மறுக்கும் அரசு

மாகாண சபைத் தேர்தல் ஜனநாயக உரிமையை மறுக்கும் அரசின் போக்கு - இரா.சாணக்கியன் எம்பி

மக்கள் பிரதிநிதிகள் இன்றி நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும் என்றும், தேர்தலைத் தாமதிப்பதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமையை அரசு மறுப்பதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் மாகாண சபைகளின் அதிகாரம் அதிகாரிகளின் பிடியில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது மாகாணங்களின் இயல்பான நிர்வாகச் செயற்பாடுகளையும் கடுமையாகப் பாதிப்பதாகக் கூறினார்.

மேலும், மாவட்ட ரீதியாக சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பது அரசியல் தந்திரோபாயமாகும் என்று சுட்டிக்காட்டிய அவர், "தேர்தல் நடத்தப்படாத ஒரு சூழலில், இவ்வாறான பதவிகளை ஆளும் தரப்பினருக்கு வழங்குவது தேர்தல் வெற்றிக்கான ஒரு தந்திரோபாயமாகவே தெரிகின்றது. இது அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள் நேரடி அரசியல் தலையீடுகளைச் செய்வதற்கான முயற்சியாகும்" என்றார்.

சுகாதாரத் துறையை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என்று எச்சரித்த சாணக்கியன் எம்.பி., முறையான தேர்தலை நடத்தி மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு அரசைக் கேட்டுக்கொண்டார்.

ட்டுக்கொண்டார்.