செம்மணி மனிதப் புதைகுழி: 246 மனித எச்சத் தொகுதிகள் அடையாளம் – 243 முழுமையாக அகழ்வு

செம்மணி மனிதப் புதைகுழி: 246 மனித எச்சத் தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழி: 246 மனித எச்சத் தொகுதிகள் அடையாளம் – 243 முழுமையாக அகழ்வு
செம்மணி மனிதப் புதைகுழி: 246 மனித எச்சத் தொகுதிகள் அடையாளம் – 243 முழுமையாக அகழ்வு
செம்மணி மனிதப் புதைகுழி: 246 மனித எச்சத் தொகுதிகள் அடையாளம் – 243 முழுமையாக அகழ்வு
செம்மணி மனிதப் புதைகுழி: 246 மனித எச்சத் தொகுதிகள் அடையாளம் – 243 முழுமையாக அகழ்வு

யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஆறாம் நாளான சனிக்கிழமை(2026 மே 02 )ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் அடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மொத்தமாக 246 மனித எச்சத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 243 எச்சத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆறாம் நாளான சனிக்கிழமை (02.05.2026) மட்டும் கூடுதலாக இரண்டு மனித எச்சத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் நீண்ட காலமாக நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளன.

இந்த அகழ்வுப் பணிகள் நீதிமன்ற உத்தரவின் கீழ், நீதிபதி கண்காணிப்பில், தொல்லியல் மற்றும் நீதிமருத்துவ நிபுணர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். கண்டறியப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் முறையான ஆய்வுகளுக்காக பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு, பின்னர் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட இந்த மனிதப் புதைகுழி, நாட்டின் கடந்தகால மோதல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வரும் என உறவினர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற அமைப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த உறுதியான தகவல்கள் மேலதிக ஆய்வுகளுக்குப் பிறகே வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அகழ்வுப் பணிகள் நடைபெறாது என்றும், ஏழாம் நாள் அகழ்வுப் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார