இலங்கையின் ஆடைத்துறையில் அதிர்ச்சி: MAS இல் 26,000 பேருக்கு வேலை போகும் அபாயம்

Shock in Sri Lanka's garment industr

இலங்கையின் ஆடைத்துறையில் அதிர்ச்சி: MAS இல் 26,000 பேருக்கு வேலை போகும் அபாயம்

இலங்கையின் மிகப்பெரிய ஆடை உற்பத்தி நிறுவனமான MAS Holdings, தனது பணியாளர்களை 96,000 இலிருந்து 70,000 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 26,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே துல்கிரியவில் உள்ள MAS Kreeda Methliya தொழிற்சாலை மூடப்பட்டு, அங்கு பணியாற்றிய 1,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து MAS KREEDA Vaanavil, MAS Active மற்றும் MAS Bodyline தொழிற்சாலைகளின் செயற்பாடுகளையும் நிறுத்த அல்லது ஊழியர்களைக் குறைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்படுவோருக்கு மூன்று மாத சம்பள இழப்பீடு அல்லது தொலைதூரப் பகுதிகளுக்கு இடமாற்றம் வழங்க நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

இந்நிலையில், MAS நிறுவனம் இந்தியாவில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருவதாகவும், குறைந்த கூலி மற்றும் மின்சாரக் கட்டணம் போன்ற சாதகமான காரணிகளைக் கருத்தில் கொண்டு உற்பத்திகளை இந்தியாவுக்கு மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தொழிலாளர் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்தப் பின்னணியில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அரசின் தலையீடும் தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பும் அவசியம் என தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.