டிஜிட்டல் சூழலில் குழந்தைகள் பாதுகாப்புக்காக சிறப்பு குழு
டிஜிட்டல் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பு
குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் அதற்கான கட்டுப்பாடுகளை கடுமைப்படுத்தும் வாய்ப்பை பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பௌல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, சிறுவர்களின் மொபைல் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது மற்றும் சமூக ஊடகங்களுக்கு சிறார்கள் அணுகுவதைக் கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு வழிமுறைகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தக் குழு கொள்கை பரிந்துரைகளை தயாரித்து அரசாங்கத்திற்கு வழங்கும்.
மேலும், பரிசீலனையில் உள்ள பரிந்துரைகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு திரை பயன்பாட்டைத் தடை செய்வதும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்துவதும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editor