ரணில் விக்ரமசிங்க அரசு நிதியைப் பயன்படுத்திய வழக்கு – ஜூலை 8ஆம் தேதி

ரணில் விக்ரமசிங்க அரசு நிதியைப் பயன்படுத்திய வழக்கு "

ரணில் விக்ரமசிங்க அரசு நிதியைப் பயன்படுத்திய வழக்கு –  ஜூலை 8ஆம் தேதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, வூல்ஹாம்டன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அரசு நிதியைப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தெளிவான ஆதாரங்கள் இருந்தும், சந்தேகநபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் ஏன் இத்தகைய தாமதம் ஏற்பட்டுள்ளது என நீதிபதி அட்டர்னி ஜனரலைக் கேட்டார். விசாரணைகளை விரைந்து முடித்து சட்டத்தை அமல்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் மீதான பொதுநிதி துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாட்டின் விசாரணை முன்னேற்றம் குறித்து ஜூலை 8ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பெரீஸ், ஜூலை 8ஆம் தேதிக்குள் சந்தேகநபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முன்னாள் ஜனாதிபதியின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவை சந்தேகநபராக பெயரிடுவது குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.