இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் 7 லட்சத்திற்கும் அதிகம்.

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிள் 7 லட்சம்.

இலங்கைக்கு  வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்  7 லட்சத்திற்கும் அதிகம்.

2026 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2026 ஜனவரி 01 முதல் மார்ச் 25 வரை 708,348 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட சமீபத்திய தரவுகள் தொிவிக்கினறன, 

அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர், அவர்களின் எண்ணிக்கை 139,164 ஆகும்.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 74,295 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 63,505 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மார்ச் மாதத்தின் முதல் 25 நாட்களில் மட்டும் 151,693 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மார்ச் மாத வருகையாளர்களில், 39,424 பேர், அதாவது 26%, இந்தியர்கள் ஆவர்.

இது தவிர, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 13,967 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவில் இருந்து 13,272 பேரும், சீனாவில் இருந்து 12,166 பேரும், ஜெர்மனியில் இருந்து 10,523 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 229,298 ஆகும்.