ட்ரம்ப் ஈரானுடன் இராகசிய பேச்சு, நெதன்யாகு கவலை

ட்ரம்ப் ஈரானுடன் இராகசிய பேச்சு

ட்ரம்ப் ஈரானுடன் இராகசிய பேச்சு, நெதன்யாகு  கவலை
ஈரான் அரசுடன் அமெரிக்கா பின்கதவால் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கவலைப்படுவதாக அக்சியோஸ் (Axios) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இஸரேலின் முதுகுக்குப் பின்னால் பேசவில்லை என்று நெதன்யாகுவிடம் அமெரிக்க நிர்வாகம் கூறியதாகவும் ஒரு தகவல் இருப்பதாக அந்த செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஆனால், தி நியூ யோயர்க் டைம்ஸ் (The New York Times) செய்தியின் பிரகாரம், ஈரானிய உளவுத்துறை அதிகாரிகள் சிலர், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழி முறைகள் பற்றி உரையாட அமெரிக்க சிஐஏ நிறுவன அதிகாரிகள் சிலரை சென்ற ஞாயிற்றுக்கிழமை அணுகியதாக தெரிய வருகின்றது.
போரை இலகுவாக முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும், ஈரான் மீதான போர் அமெரிக்க நலன்களுக்கு சாதகமான ஒன்று.அதன் காரண- காரியமாக ஈரானில் "வெனிசுலா போன்ற தீர்வு" உருவாகுவதை இஸ்ரேல் விரும்பவில்லை என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவதாக நியூ யோயர்க் டைம்ஸ் விமர்சனம் ஒன்றை பதிவு செய்துள்ளது.                                                                                                                       
 அ.நிக்ஸன்