அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் அப்பாஸ் பந்தர் வானொலி நிலையம் மீது தாக்குதல் ஒருவா் பலி

அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் வானொலி நிலையம் மீது தாக்குதல் – ஒருவர் பலி

அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் அப்பாஸ் பந்தர் வானொலி நிலையம் மீது தாக்குதல் ஒருவா் பலி

ஈரானின் தெற்கு துறைமுக நகரான அபாஸ் பந்தரில் உள்ள பாரசீக வானொலி மற்றும் தொலைக்காட்சி மையத்தின் (Persian Gulf Radio and Television Center) வானொலி ஒலிபரப்பு கோபுரத்தை அமெரிக்க-இஸ்ரேல் படைகள் தாக்கியதில் ஒரு பாதுகாப்பு ஊழியர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார் . 100 கிலோவாட் திறன் கொண்ட ஏஎம் வானொலி ஒலிபரப்பு கோபுரமே இத்தாக்குதலின் இலக்காக இருந்ததாக ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐஆர்ஐபி தெரிவித்துள்ளது .

இத்தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறியது என்று மையத்தின் பொது இயக்குநர் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குப் பின்னர், வானொலி நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பி ஒலிபரப்பை மீண்டும் ஆரம்பித்துள்ளது . ஹோர்முஸ் ஜலசந்தியின் வடக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள அபாஸ் பந்தர், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஈரானிய துறைமுகமாகும், மேலும் இது ஒரு முக்கிய கடற்படைத் தளத்தையும் கொண்டுள்ளது .