விஜய்-சங்கீதா விவாகரத்து பரபரப்பு: த்ரிஷாவுடன் விஜய் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் சர்ச்சை!
ஜய்-சங்கீதா விவாகரத்து பரபரப்பு
நடிகர் விஜய்க்கும் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய வழக்கில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சங்கீதா, தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் தன்னை அனுமதிக்குமாறு கோரி புதிய இடைக்கால மனு ஒன்றை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் இந்த நிலையில், விஜய்யும் நடிகை த்ரிஷாவும் ஒன்றாக ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்திபன் - த்ரிஷா சர்ச்சை
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷாவைப் பற்றி, "குந்தவை இப்போது வீட்டுக்குள்ளேயே இருந்தால் நல்லது" என பேசியிருந்தார். இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த த்ரிஷா, தனது எக்ஸ் பக்கத்தில், "அடிப்படை அறிவில்லாமல் பேசப்படும் தரம் தாழ்ந்த சொற்கள், யாரை நோக்கி வீசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரின் தரத்தையே பிரதிபலிக்கும்" என காட்டமாக பதிலளித்தார். மேலும், மைக் பிடித்துப் பேசுவதால் ஒருவர் சொல்லும் கருத்து அறிவார்ந்ததாகவோ நகைச்சுவையாகவோ மாறிவிடாது, அது முட்டாள்தனமான கருத்து என்றும் சாடியிருந்தார்.
பார்த்திபன் வருத்தமும், பின்னர் விளக்கமும்
தனது கருத்துக்கு விமர்சனம் எழுந்த நிலையில், பார்த்திபன் வருத்தம் தெரிவித்து, "எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது, இதில் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை" எனக் கூறினார். அதன்பின், த்ரிஷாவைப் பாராட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிடவிருப்பதாக அறிவித்து, மாலை 6 மணிக்கு அது வெளியாகும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.
6 மணி வீடியோ வெளியாகாததற்கு விளக்கம்
எதிர்பார்த்த 6 மணிக்கு வீடியோ வெளியாகாத நிலையில், அதற்கு விளக்கம் அளித்துள்ள பார்த்திபன், தனக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "உங்கள் ப்ரோமோவைப் பார்த்தேன், அந்த வீடியோவை வெளியிடாமல் இருப்பது நல்லதா?" என ஒருவர் கேட்டதாகவும், ஏற்கனவே தன் தரப்பில் நேர்மறையான சூழல் இருப்பதால் இதோடு விட்டுவிடலாமே என்ற அந்த நபரின் கருத்தை மதித்து, வீடியோ வெளியீட்டைத் தள்ளி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெளிவான தகவல்கள் விரைவில் தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Editor