ரூபா. 47.7 மில்லியன் பெறுமதியான 'ஹசீஸ்' - போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

ரூபா. 47.7 மில்லியன் பெறுமதியான 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கைது

ரூபா. 47.7 மில்லியன்  பெறுமதியான 'ஹசீஸ்'  - போதைப்பொருளுடன்   இளைஞர்  கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான ஊடாகப் பாரியளவிலான 'ஹசீஸ்'' எனும் போதைப்பொருளை கையிருப்பாக எடுத்துக்கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதான அந்த சந்தேக நபர், பாங்காக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் அதிகாலை சுமார் 12.30 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

சொக்லேட் போன்று பொதி செய்யப்பட்ட 15 உறைகளுக்குள் இந்த 'ஹசீஸ்' போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சோதனையின்போது அம்பலமானது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சந்தேக நபர் பொட்டலங்களுக்குள் மறைத்து 4 கிலோகிராம் மற்றும் 778 கிராம் ஹஷிஷை கடத்தி வந்திருந்தது தெரியவந்தது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் ரூ. 47.7 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, மேற்படி இளைஞரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான உத்தரவைப் பெற்று, இந்தப் போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் ஏனைய நபர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.