டிரம்பை கடுமையாக விமர்சித்த ஸ்பெயின் பிரதமர் – “வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்”

டிரம்பை கடுமையாக விமர்சித்த ஸ்பெயின் பிரதமர்

டிரம்பை கடுமையாக விமர்சித்த ஸ்பெயின் பிரதமர் – “வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்”

பெட்ரோ சான்செஸ் தலைமையிலான ஸ்பெயின் அரசாங்கம், உலகளாவிய மோதல்களை அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தும் அணுகுமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக டொனாலட்  டிரம்ப்  மீது மறைமுகமாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஸ்பெயின் பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், “வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மில்லியன் கணக்கான மக்களின் தலைவிதியுடன் விளையாட முடியாது” என வலியுறுத்தினார். உலகின் பல பகுதிகளில் உருவாகியுள்ள பதற்றநிலைகளை குறிப்பிட்டு, இந்த மோதல்களில் ஈடுபட்டுள்ள சக்திகள் உடனடியாக விரோத நடவடிக்கைகளை நிறுத்தி, உரையாடல் மற்றும் ராஜதந்திர முயற்சிகளின் மூலம் தீர்வை நாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், உலக அரசியல் தலைவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகளையும் பொறுப்புகளையும் காக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார். குறிப்பாக உக்ரைன் காசா பகுதி, வெனிசுவேலா மற்றும் கிரீன்லாந்து போன்ற பகுதிகளில் நிலவும் பதற்ற நிலைகளை எடுத்துக்காட்டி, அரசுகள் மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொறுப்பை முன்னிலைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“அரசுகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காகவே உள்ளன; அதை மேலும் சிரமப்படுத்துவதற்காக அல்ல. தங்களது அரசியல் தோல்விகளை மறைக்க சில தலைவர்கள் போரின் புகையை நாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது,” எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

ஸ்பெயின் பிரதமரின் இந்த கருத்துக்கள், சமீப காலங்களில் உலக அரசியலில் உருவாகியுள்ள பதற்றநிலைகள் மற்றும் அமெரிக்க அரசியல் விவாதங்களின் பின்னணியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.